Monday, August 29, 2011

வீர மங்கை காஞ்சிபுரம் செங்கொடி









Friday, July 29, 2011

நெஞ்சினை பதற வைக்கும் போர்க் குற்ற காட்சிகள் - சிங்கள ராணுவ வீரரின் நேரடி சாட்சியம் -மீண்டும் சேனல் 4 வெளியிட்டது


இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே உச்சக்கட்ட போர் நடந்த போது மனிதாபிமானமற்ற கொடூர செயல்களில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.

தமிழ் வாலிபர்களை நிர்வாணமாக்கி கண்களை கட்டி ஈவு இரக்கமின்றி அவர்கள் சுட்டுக்கொன்ற காட்சிகள் இங்கிலாந்து நாட்டின் `சேனல் 4' தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

இதையடுத்து போர்க்குற்றம் புரிந்த அதிபர் ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை உலகளவில் வலுத்து வருகிறது.

இந் நிலையில் இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் சிங்கள ராணுவத்தினர் நடத்திய கோர தாண்டவங்களை `சேனல் 4' மேலும் அம்பலப்படுத்தியுள்ளது.

இறுதிக்கட்ட போரின் போது சரண் அடையும் விடுதலைப் லிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக அதிபர் ராஜபக்சே உறுதி அளித்தார். அவரது பொய்யான வாக்குறுதியை நம்பி ஏராளமான விடுதலைப் புலிகள் சரணடைந்தனர். அவரது வாக்குறுதியை நம்பி சரண் அடைந்த விடுதலைப் புலிகளை ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டுக் கொல்லுமாறு பிரிகேடியர் சவேந்திர சில்வாவுக்கு, ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டதாக சேனல் 4 தெரிவித்துள்ளது.

இதையடுத்து விடுதலைப்பு லிகளை சிங்கள ராணுவத்தினர் கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர். இத் தகவலை அப்போது இலங்கை ராணுவத்தின் 58வது படைப்பிரிவின் ராணுவ வீரர் ஒருவரே உறுதிப்படுத்தி உள்ளார்.

அதன்பிறகு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிரிகேடியர் சவேந்திர சில்வா பதவி உயர்வு அளிக்கப்பட்டு தற்போது ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் துணைத் தூதராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

போரின் இறுதி நாட்களில் நடந்த கொடூரங்கள் குறித்து பெர்னாண்டோ என்ற ரா ராணுவ வீரர் `சேனல் 4' தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி, கதி கலங்க வைத்துள்ளது.

தனது பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய சக ராணுவ வீரர்கள், கண்ணில் பட்ட அப்பாவி மக்களை எல்லாம் மிருகத்தனமாக சுட்டுக் கொன்றனர். மரத்தில் கட்டி வைத்து உதைத்தனர். துடிக்க துடிக்க அவர்களுடைய நாக்குகளை அறுத்து எரிந்தனர். பெண்கள், முதியவர்கள், குழந்தைகளையும் கூட விடாமல் கொன்று குவித்தனர். அப்படி கொல்லப்பட்டவர்கள் யாரும் விடுதலைப் புலிகள் அல்ல. சாதாரண குடிமக்கள்தான். பெண்களை அடித்து, உதைத்து, துன்புறுத்தி கற்பழித்தனர்.

அந்த கொடூரத்தை தடுக்க முயன்ற அவர்களுடைய பெற்றோர்களை அந்த இடத்திலேயே சுட்டுக் கொன்றனர். மருத்துவமனையில் தமிழ் இளம்பெண் ஒருவரை எனது சகாக்கள் 6 பேர் சேர்ந்து கற்பழித்த கோரத்தை என் கண்களாலேயே பார்த்தேன்.

ராணுவத்தினரின் செயல்கள் மிருகங்களை விட மோசமாக இருந்தது. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் ஆங்காங்கே ரத்த வெள்ளத்தில் சிதறிக் கிடந்ததை பார்த்தேன்.

இவ்வாறு தனது பேட்டியின் போது சிங்கள ராணுவ வீரர் பெர்னாண்டோ தெரிவித்து உள்ளார்.

தகவல் : தட்ஸ் தமிழ்.

கலங்கிய விழிகளுடன்
நிற்கிறேன்.
நிகழ்காலத்தில் என் நினைவு பிறழாமல் இருப்பதற்காக
கூசுகிறேன்.
மானுடனாய் இருந்திருந்தால் உண்மையில் மாண்டிருப்பேன்.
தமிழனாய் பிறந்திருப்பதால் தலைக் குனிந்தவாறே உடலை சுமக்கிறேன்.

மீண்டெழுந்த தமிழ் உணர்வில் சிதறுண்ட காங்கிரசு.-மணி செந்தில்


“ ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ, ஆயுதப் பலமோ அல்ல. அசைக்க முடியாத மனவுறுதியும், வீரமும் விடுதலைப்பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள்”

– தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்கள்.

நான் முதன்முதலில் அவரை சந்தித்தப்போது அவர் வெகு சாதாரணமான இருந்தார். ஒரு கிராமத்து எளிய மனிதனுக்குரிய சொற் பிரயோகங்கள்.வார்த்தைக்கு வார்த்தை ‘ அண்ணன்’, ’ மூத்தவர் ’என்றெல்லாம் தேசியத்தலைவரை அழைத்துக் கொண்டிருந்த தன்மை.எளிய உடை. அனைவரையும் கவரக் கூடிய புன்னகை. வயதானவர்கள் தன்னைக் காண வரும் போது எழுந்து நின்று வணங்கும் பணிவு . நான் அவரைக் காணும் போது கையில் சேகுவேரா புத்தகமான ’கனவிலிருந்து போராட்டத்திற்கு’ என்ற புத்தகத்தினை அவர் வைத்திருந்தார். உண்மையில் உணர்வோடிய ஒரு கனவிற்கு உயிர்க் கொடுக்க அவர் அப்போது தயாராகிக் கொண்டிருந்தார் என எனக்கு அப்போது தெரியவில்லை.

மறுமுறை நான் அவரைப் பார்த்த இடம் ஒரு சிறை . சிறை ஒரு மனிதனை இத்தனை உற்சாகமாக வைத்திருக்குமா என ஆச்சர்யப்பட வைத்த சந்திப்பு அது. உடல் வியர்த்து கண் சிவந்திருந்த அவர் பல நாள் உறக்கமற்று சிறை அறைக்குள் தவித்துக் கொண்டிருந்தார். ஈழ பெரு நில யுத்தம் தனது இறுதியை நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்த நாட்கள் அவை. தன்னோடு உடன் பிறந்தானாய் பிறந்த , தன்னோடு ஈழ நிலத்தில் பழகிய விடுதலைப்புலிகளின் தளபதிகள் ஒவ்வொருவராய் வீர மரணம் எய்துக் கொண்டிருந்த கனமான நாட்கள் அவை. மிகுந்த கோபம் இருந்தது அவருக்கு. எந்த நொடியும் வெடித்து விடும் இதயச் சுமையோடு வார்த்தைகளில் தன் கோபத்தினை வைத்திருந்தார் அவர். தனது சகோதரர்கள் ஒவ்வொருவராய் வீர மரணம் எய்தும் போது குளியலறைக்குள் சென்று கத்தி, கதறி அழுது விட்டு வந்ததாக சொன்னார். அதை அவரது முகமே காட்டியது.

மிக நீண்ட தூர பயணம் அது. ஆபத்துக்கள் நிறைந்த , இழப்புகள் மலிந்த அந்த பயணத்திற்கு எங்களை தயார் செய்வதில் தன்னுடைய கடுமையான முயற்சியினை அவர் செலவிட்டுக் கொண்டிருந்தார். தமிழ்நாடு எங்கும் சுற்றி வரப்போகும் பயணத்திற்கு நாங்கள் அனைவரும் எங்களுக்கு தெரிந்த ஆலோசனைகளை தெரிவித்துக் கொண்டிருந்தோம். குறைவான நாட்களில் மிகுதியான மக்களை சந்திக்கப் போகும் அந்த பயணத்தில் எதிர்க்கொள்ள வேண்டிய பல்வேறு சோதனைகளை அவர் படிப்படியாக திட்டமிட்டார். எங்களின் ஒவ்வொரு அசைவையும் அவர்தான் தீர்மானித்தார். எங்களுடைய எதிரிகள் பலமானவர்கள். பண பலமும், ஆட்சி அதிகாரமும் நிரம்பிய எதிரிகளை எவ்விதமான அதிகாரமும், பொருளாதார வலுவும் இல்லாத ..இந்த எளிய இளைஞர்களாகிய நாங்கள் எப்படி எதிர்க்கொள்ள போகிறோம் என்ற பிரமிப்பு எங்களிடம் அப்போது இருந்தது. அப்போது அவர் சொன்னார் ’ எல்லாம் முடியும்.செய்வோம்’.

இது போன்ற சோதனை மிகு காலங்களில் சுடர் விடும் நம்பிக்கையை அவர் அவரது உள்ளொளியாக விளங்கும் , அவரது அண்ணன் பிரபாகரனிடம் இருந்து அவர் கற்றிருந்தார். அதைத்தான் எங்களுக்கும் அவர் கற்றுக் கொடுத்தார் . மக்களை சந்தியுங்கள், வீதியில் இறங்குங்கள் – மக்களை புறக்கணித்து விட்டு எதுவும் ஆகாது என எங்களிடம் கடுமையாக அவர் தெரிவித்திருந்தார். அரசியலுக்கு புதிய வரவான நாங்கள் மக்களை எவ்வாறு சந்திப்பது என கற்றிருக்கவில்லை . ஆனால் அவரோ ’மக்களிடமிருந்துதான் நாம் வந்திருக்கிறோம். மக்களுக்காக வந்திருக்கிறோம், மக்களிடமே போவோம்’ என்றார். தெருக்களை நோக்கி நகருங்கள் என்ற அவரது கண்டிப்பான உத்திரவில் நாங்கள் அனைவருமே கட்டுண்டு கிடந்தோம்.

மக்களை புறக்கணித்து விட்டு மண்டபங்களில் கருத்து கதா காலட்சேபசம் நடத்துவதில் எவ்வித பயனுமில்லை என நன்கு உணர்ந்திருந்தார். மக்களை திரட்டி பெரும் திரளாய் எதிரியோடு மோதாமல் எதுவும் நடக்காது என அறிந்திருந்தார் . வயதான தோள்களில் முடியாமல் தொங்கிக் கொண்டிருந்த ஜோல்னா பையில் தூங்கிக் கொண்டிருந்த தமிழ்த் தேசியம் என்ற கருத்துருவினை ஜீன்ஸ் அணிந்து, பிரபாகரன் பனியன் போட்ட இளைஞர்களின் கரங்களுக்கு அவர் மாற்றினார்.

பிரபாகரன் படம் வைத்திருந்தாலே கைது என்று அச்சம் ஊறிக் கிடந்த காலக்கட்டத்தில் தன் தலைவரின் படத்தினை நெஞ்சில் பனியன்களாக ஏந்தி வீதிகளில் திரிந்த இளைஞர் பட்டாளத்தினை அவர் உருவாக்கினார். ஒரு சிறிய துண்டறிக்கையானாலும் சரி.. அதை மிகுந்த நுணுக்கமாக ஆராய்ந்து ..திருத்தங்கள் கூறி அதை அவர் சிறப்பாக்கினார். தன்னை வாழ்க..வாழ்க என முழக்கமிடும் இளைஞர்களை கடிந்துக் கொண்ட அவர் தேசியத் தலைவர் பிரபாகரன் வாழ்க என முழங்கு என அறிவுறுத்தினார்.

அரசியல் கட்சியாக மாறிய உடனே ஓட்டு வாங்கிக் கொண்டு பதவி ஏறி பல்லக்கில் பவனி வர போவதற்கான திட்டம் இது என விமர்சனக் கணைகள் பாய்ந்து வந்த போது அதை அவர் பொருட்படுத்தவே இல்லை. பதவி தான் முக்கியம் என்றால் நான் திமுக, அதிமுக என ஏதோ ஒரு கட்சியில் இணைந்து விட்டிருப்பேனே, கட்சி,நிர்வாகம் எனவெல்லாம் தொந்தரவுகள் ஏதுமின்றி நான் நினைத்த பதவியை அடைந்திருப்பேனே.. என மிகுந்த அலட்சியமாக பதிலளித்தார். பசும்பொன் முத்துராமலிங்கனார், இமானுவேல்சேகரனார், இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர், புலவர் கலியபெருமாள், போன்ற மறைந்த தமிழகத்தலைவர்களின் நினைவிடங்களுக்கு அவர் சென்ற போது திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட சர்ச்சைகளை அவர் சட்டை செய்ததே இல்லை. நானும் ஒரு நாள் இது குறித்து அவரிடம் நேரடியாக கேட்டதற்கு” மறைந்துப் போன நமது பாட்டான்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டிருக்கலாம். அவர்களுக்குள்ளாக இருந்த முரண்களை பெரிது படுத்தி இப்போது இருக்கும் அண்ணன் தம்பிகளை என்னால் அடிச்சிக்க வைக்க முடியாது. நான் தமிழனாய் ஒன்று படுத்த வந்திருக்கிறேன். யாரையும் குறை கூறி பிரிக்க அல்ல’ என்று தனது எளிய தமிழில் வலிமையாக சொன்னார்.

அவரிடம் அசைக்க முடியா கனவொன்று இருந்தது. அந்த கனவில் ஒரு இனத்தின் மீது கவிழ்ந்த துயரங்களுக்கு பிறகு மிஞ்சிய வன்மம் இருந்தது. என்ன விலைக் கொடுத்தேனும் நம் இனத்தினை அழித்த காங்கிரசுக்கு வாக்கு என்ற ஆயுதத்தினை பயன்படுத்தி வீழ்த்த வேண்டும் என்ற அவரது உளமார்ந்த விருப்பத்திற்கு அவர் எதையும் இழக்க தயாராக இருந்தார். கொடுஞ்சிறையும், கடுமையான அலைக்கழிப்புகளும் உடைய அவரது வாழ்க்கை அவருக்கு அளித்த உடற்உபாதைகள் அவரை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கினாலும் அவரின் அசாத்திய கனவுகள் அவரை இயக்கிக் கொண்டே இருந்தன.

தன்னை சுற்றி தனது அண்ணன் பிரபாகரனின் படங்களை அவர் மாட்டியிருப்பதற்கு ஏதோ உளவியல் காரணம் இருக்கக் கூடும் என என் உள்மனம் சொல்லியது. ஆம். அது உண்மைதான். பல அசாத்தியங்களை சாத்தியப்படுத்தும் திறனை அவர் தேசியத் தலைவரிடம் இருந்து தான் எடுத்துக் கொண்டார். இன்னமும் தனது அண்ணன் பிரபாகரன் உடனான சந்திப்பினை அவர் சிலிர்ப்பாய் விவரிக்கையில் அவரின் கண்களில் மிளிரும் ஒளியை நான் அருகில் இருந்து கவனித்திருக்கிறேன்.

தமிழினத்தின் பெருங்கனவான ஈழப் பெருநிலத்தினை அழித்த காங்கிரசு கட்சியினை அரசியல் பலம் கொண்டு,மக்களை திரட்டி வீழ்த்தி விட அவர் முயன்றார். அப்போது அவரிடம் அதை நிறைவேற்ற நம்பிக்கை என்ற ஆயுதம் மட்டுமே இருந்தது. எதிரே நின்ற எதிரி சாமன்யப்பட்டவன் அல்ல. நூற்றாண்டு கடந்த பழமையும், அதிகாரம் தந்த வளமையும் உடைய இந்த தேசத்தினை பல முறை ஆண்டு, இப்போதும் ஆண்டுக் கொண்டிருக்கிற காங்கிரசுக் கட்சி. ஆனால் அவரும் , அவரது தம்பிகளும் அசரவே இல்லை. அவரும், அவரது இயக்கத்து தம்பிகளும் தங்களது கடுமையான உழைப்பினால் தமிழ்த் தேசிய இனத்தின் இலட்சியக்கனவொன்றை நிறைவேற்ற தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்தார்கள். ஈழப் பெரு நிலத்தில் இறுதிக்கட்ட போரின் போது அடுக்கி வைக்கப்பட்டிருந்த காட்சிகள் எப்போதும் அவரது மனக்கண்ணில் தோன்றி அவரை உசுப்பேற்றிக் கொண்டே இருந்தது. கண்ணீரை துடைத்து விட்டு, பாய்ந்து எழுந்து மக்களிடம் ஓடினார். அடிவயிற்றிலிருந்து பொங்கிய கோபத்தினை எல்லாம் திரட்டி எடுத்து உக்கிர வார்த்தைகளால் காங்கிரசை வறுத்தெடுத்து ஓட விட்டார் அவர். ஏன் இத்தனை கோபம் என கேட்டதற்கு” பிரபாகரனை சோனியா காந்தி வீழ்த்தினார் என வரலாறு சொல்லக் கூடாது. பிரபாகரன் தன் தம்பியை வைத்து சோனியா காந்தியை வீழ்த்தினார் என்றுதான் வரலாறு சொல்லவேண்டும் “ என துடிப்புடன் கூறிய அவரை யாராலும் நேசிக்காமல் இருக்க இயலாது.

உண்மையில் அது தான் நடந்தது. பிரபாகரன் தோற்கவில்லை. மாறாக தன் தம்பியை அனுப்பி காங்கிரசை தோற்கடித்தார். இப்படித்தான் வரலாறு இதை பதியப் போகிறது.

போட்டியிட்ட 63 தொகுதிகளில் 58 தொகுதிகளில் காங்கிரசு தோல்வி அடைந்ததற்கான முழு முதற் காரணம் அவரும், அவரின் தம்பிகளும் தான். வேகமாக வரும் வாகனத்தில் இருந்து அடுத்த ஊருக்கு பயணப்பட்டாக வேண்டும் என்ற அவசரத்தில் பாய்ந்தோடி மேடையில் ஏறி ,காங்கிரசினை ஏன் தோற்கடிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை அடுக்கடுக்காக ஆவேசமாக எடுத்து வைத்த போது காற்று திசை மாறி வீசத் துவங்கி இருந்தது. அடித்து வீசிய புயலில் சிக்குண்ட சருகுகளாகி காங்கிரசு வேட்பாளர்கள் சிதறுண்டு போனார்கள்.

காங்கிரசை எதிர்க்கப் போய் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்கிறார்களே…இது அடுக்குமா,தகுமா என்றெல்லாம் வழக்கம் போல் சங்கு ஊதினர் சிலர். இந்தியத் தேசியம் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது. இந்திய தேர்தல் கமிசன் நடத்தும் தேர்தலில் பங்குப் பெற்றால் தமிழ்த்தேசியம் மலராது. எனவே தேர்தல் புறக்கணிப்பு தான் செய்ய வேண்டும் என்றனர் சிலர். காங்கிரசிற்கு ஓட்டு போடாதீர்கள் என்று மட்டும் சொல்லுவோம் ,எந்த கட்சிக்கும் ஓட்டு கேட்காமல் இருப்போம் என தானும் குழம்பி,மக்களையும் குழப்ப முயன்றனர் சிலர். ஆனால் இவற்றை எல்லாம் காதில் ஏற்றிக் கொள்ளாமல் தெளிவாக இருந்தார் அவர்.

தேர்தல் புறக்கணிப்பு என்று அறிவார்ந்த பெருமக்கள் வெளியிட்ட அறிவிப்பின் காரணமாகவோ, என்னவோ தெரியவில்லை. 85% -க்கும் மேலான ஓட்டுப் பதிவினைக் கண்டது தமிழகம். மக்களை விட்டு விட்டு இவர்கள் யாருக்கு எதை செய்யப் போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாத காரணத்தினால் இவற்றை எல்லாம் அவர் யோசிக்கக் கூட இல்லை. காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் என்பது ஒற்றைத் திட்டம். அதற்கு எதிர்த்து நிற்கும் பிரதான எதிர்க்கட்சி வெல்ல வேண்டும் என்பது சிறு குழந்தைகளும் அறிந்த, அறிவார்ந்த பெருமக்கள் மட்டும் அறியாத உண்மையாதலால் காங்கிரசை எதிர்த்து இரட்டை இலை என்ன ,அங்கு மொட்டை இல்லை நின்றால் கூட நான் ஆதரிப்பேன் என்று தெளிவாக இருந்தார் அவர்.

காங்கிரசின் கரூர் வேட்பாளர் ஜோதிமணி தன்னை எதிர்த்து அவர் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என கேட்டதற்கு” தங்கையே! நீ காங்கிரசை விட்டு வெளியேறி காங்கிரசை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடு. நான் ஆதரித்து பிரச்சாரம் செய்கிறேன். என அறிவித்தார் அவர்.

ஓயாத அலைகளை நினைவுப்படுத்தும் தாக்குதல்களை காங்கிரசின் இன எதிர்ப்பு அரசியலின் மீது நிகழ்த்தினார் அவர்.காங்கிரசின் கோட்டைக்குள் அவரின் சொற்கள் பாய்ந்து குண்டுகளாய் வெடித்தப் போது குலைந்துப் போனது காங்கிரசின் கோட்டை.இதோடு முடியவில்லை. தன் தாய்நில மக்களுக்கான ..ஒரு தாயக நாட்டை அடைவது வரைக்குமான அவரது கனவு மிகுந்த நீண்ட நெடிய ஒன்றாகும். சற்றும் சளைக்காத அவரது சொற் அம்புகள் எதிரிகளின் மீதும், துரோகக் கூட்டங்களின் மீது மழைப் போல பொழிய காத்திருக்கின்றன .

இனம் அழிந்த கதையிலிருந்து ஆவேசத்தினையும், தன் அண்ணன் பிரபாகரன் வாழ்க்கையில் இருந்து நம்பிக்கையையும் எடுத்துக் கொண்டு அவர் செல்லவிருக்கும் தொலைத் தூர லட்சிய பயணத்தில் பங்குப் பெற்று தன்னேயே ஒப்புக் கொடுக்க தமிழின இளைஞர் கூட்டம் தயாராக இருக்கிறது. அவரது பயணமும் துவங்கி விட்டது. அந்த இராஜப்பாட்டையில் அதிரும் குதிரைக் குளம்பொலிகளில் சிதறுண்டுப் போகும் எதிரிகளின் பகை.

நீண்ட இலக்கினை நோக்கி பாய்ந்த அம்பொன்று, குறுகிய இலக்கொன்றை ஊடறுத்து தாக்கி, துளைத்து பின் பாய்வது போல , காங்கிரசினை தமிழ் மண்ணில் வீழ்த்தி இருக்கும் அவர் தளராமல் முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்த் தேசிய இனத்தின் நம்பிக்கை அவர்.

அவர்தான் செந்தமிழன் சீமான் எனும் தமிழினத்தின் புதிய வெளிச்சம்.

Monday, June 27, 2011

Wednesday, June 22, 2011

ஜெவுக்கு நன்றி! – நாம் தமிழரின் பிரமாண்ட சைதைப் பொதுக்கூட்டம

ஜெயலலிதாவை புரட்சித் தலைவி என அழைப்பதற்கு பெறுமைப்பட வேண்டும்: சீமான்.

ஈழ தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் பாராட்டு கூட்டம் நடத்தப்பட்டது.

சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் நடைபெற்ற கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தலைமை தாங்கினார். பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான்,

இலங்கை அதிபர் ராஜபசேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என வலியுருத்தியும் தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

தேர்தல் நேரத்தில் இலங்கைப் பிரச்சனைக்கு தனி ஈழம்தான் தீர்வு என ஜெயலலிதா கூறியிருந்தார். அதை தேர்தல் நேரத்துப் பசப்பு வார்த்தைகள் என அப்போது சிலர் கூறினர். தேர்தலில் அதிமுக வென்றதோடு மட்டுமல்லாமல் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தையும் சட்டப் பேரவையில் நிறைவேற்றியபோது, இது வெறும் தீர்மானத்தோடு நின்றுவிடும் என்றும் சிலர் கூறினர்.

ஆனால் அண்மையில் டெல்லிக்குச் சென்ற முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளித்த முதல் கோரிக்கையே இலங்கைப் பிரச்சனை பற்றித்தான். அதனால் ஈழப் பிரச்சனையில் நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது என்றார்.

மேலும் அவர் பேசுகையில், இலங்கையில் நடந்த இறுதிப்போர் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே மட்டும் நடைபெறவில்லை.

இலங்கைக்கு ஆதரவாக 20 நாடுகள் போர்க்களத்தில் நின்றன. லிபியா நாட்டில் ஒரு பிரச்சினை என்றதும் அங்குள்ள மக்களுக்காக அமெரிக்காவும், மற்ற நாடுகளும் ஓடோடிச் சென்றன. ஆனால் ஈழத்தில் இனப்படுகொலை நடந்த போது எந்த நாடும் கண்டு கொள்ளவில்லை.

சட்டமன்ற தேர்தலின் போது இரட்டை இலை துளிர்த்தால் ஈழம் மலரும் என்று நான் பிரசாரம் செய்தேன். பலர் என்னை பார்த்து ஏளனம் செய்தார்கள். இன்று நாம் நினைத்தது போல, ஜெயலலிதா முதல் அமைச்சராகி வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார்.

8 கோடி தமிழக மக்களின் பிரதிநிதியான முதல் அமைச்சர் ஜெயலலிதா, இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கும் தீர்மானத்தை ஒரு அமைச்சரை வைத்து முன்மொழிய சொல்லி இருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. ஈழத் தமிழர்களின் நலனுக்காக நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானத்தின் முக்கியத்துவம் கருதி சட்டமன்றத்தில் அவரே தீர்மானத்தை முன் மொழிந்து பேசினார். துணிச்சல் மிக்க பெண்மணி அவர்.

இதற்காக நன்றி என்ற வார்த்தையோடு நாம் நிறுத்திக் கொள்ளக்கூடாது. இலங்கையில் தமிழ் ஈழம் மலர்வதற்காக அவர் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் துணை நிற்போம். அவரது செயல்பாடுகளை ஊக்கப்படுத்த என் தம்பிமார்கள் அனைவரும் அணி திரள வேண்டும்.

புரட்சித் தலைவி என்ற பட்டத்துக்கு அவர் பொறுத்தமானர். அவரை புரட்சித் தலைவி என்று அழைப்பதற்காக தமிழர்களாகிய நாம் பெறுமைப்பட வேண்டும். தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா பொறுத்தவரை எந்த காரியத்தில் இறங்கினாலும் அதனை நிறைவேற்றாமல் விடமாட்டார். தமிழ் ஈழத்தையும் அவர் பெற்றுத் தருவார். இதற்காக இறுதிவரை நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்றார்.

பொதுக்கூட்டத்தில் நடிகர் சத்யராஜ் பேசும்போது,

நான் இந்த நாம் தமிழர் மேடையில் ஏன் ஏறியிருக்கிறேன் என்று நினைப்பீர்கள். நாம் தமிழர் மேடை மட்டுமல்ல. ஈழ மக்களுக்காக குரல் கொடுக்கும் எந்த மேடையிலும் நான் இருப்பேன்.

ஈழப்பிரச்சனையைக்கு மட்டும் ஏன் தொடர்ந்து குரல் கொடுக்கிறீர்கள் என்று எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள். அவர்களுக்கு சொல்கிறேன். மற்ற பிரச்சனைகளை பேச நிறைய அமைப்புகள் இருக்கின்றன.

ஆனால் ஈழ மக்களுக்கு குரல் கொடுக்க சில அமைப்புகள் தான் இருக்கின்றன. அதனால்தான் அந்த சில அமைப்புகளோடு கைகோர்த்திருக்கிறேன்’’ என்று பேசினார்.

மேலும், ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய வீராங்கனை வேலு நாச்சியார் போன்று வீரம் மிக்கவர் ஜெயலலிதா தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் சீமானும், ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் முதல் அமைச்சர் ஜெயலலிதாவும், இரட்டை குழல் துப்பாக்கிகள்.

தமிழ் ஈழம் மலர முதல் அமைச்சர் ஜெயலலிதா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் உறுதுணையாக இருப்போம் என்று சத்யராஜ் பேசினார்.

பொதுக்கூட்டத்தில் பேசிய இயக்குனர் மணிவண்ணன்,

இலங்கை தமிழர்களுக்காக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் வரவேற்கத்தக்கது. ஈழத் தமிழர்களின் விவகாரத்தில் தைரியத்துடன் செயல்பட்டு வரும் ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. தேர்தலின் போது எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் நாம் தமிழர் கட்சி செயல்பட்டது.

சீமான் ஒருவர் தான் இலங்கை தமிழர் பிரச்சினைகளை பற்றி பேசினார். எனவே தமிழர்கள் அவருக்கு துணையாக இருக்க வேண்டும். இலங்கையில் தமிழர்கள் உணவுக்கு வழியின்றி தவித்து வருகிறார்கள். ஆனால் மத்திய அரசு நட்சத்திர ஓட்டல் வசதிகளுடன் அங்கு கப்பலை இயக்குகிறது. இதில் ஏறி நாம் எப்படி பயணம் செய்ய முடியும் என்றார் மணிவண்ணன்.

கூட்டத்தில் இயக்குனர்கள் மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, நடிகர் சத்யராஜ், பேராசிரியர் தீரன், அற்புதம்மாள், கலைக்கோட்டுதயம், அன்புதென்னரசு, கோட்டைகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். அய்யநாதன் தீர்மானங்களை வாசித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

இலங்கையில் தமிழினத்தை அழித்த அதிபர் ராஜபக்சே உள்ளிட்டவர்களை போர்க்குற்றவாளிகள் என அறிவிக்குமாறும், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமின்றி, அதனடிப்படையில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து வழங்கிய மனுவிலும் அந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

மத்திய அரசின் நடவடிக்கைகள் அனைத்துமே ராஜபக்சே அரசுக்கு ஆதரவாகவே உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுமாறு முதல்வருக்கு வலியுறுத்துகிறோம். சமீபத்தில் முதல்வரை சந்தித்துவிட்டு கொழும்பு சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் ஐ.நா. குழுவின் அறிக்கை குறித்து கருத்து கேட்டதற்கு, “ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் எந்த ஒரு நாட்டையும் தனிமைப்படுத்தி கண்டனம் செய்ய இந்தியா அனுமதிக்காது” என்று கூறியுள்ளார்.

இதற்கு இலங்கை அரசை தனிமைப்படுத்த மாட்டோம் என்பதே பொருள். எனவே மத்திய அரசு இலங்கைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பது தெளிவாகியுள்ளது. இலங்கைக்கு எதிராக மற்ற மாநில அரசுகளின் தலைவர்களிடமும், இந்தியாவின் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமும் பேசி, இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை தீர்மானத்தை நிறைவேற்றுமாறு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்.

தூத்துக்குடி – கொழும்பு இடையிலான கப்பல் போக்குவரத்தை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியதற்காகவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழினம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது. பொருளாதார புறக்கணிப்பை முன்னெடுக்கும் வகையில் இலங்கை பொருட்களை புறக்கணிப்போம், தமிழக வணிகர்கள் யாரும் அந்நாட்டுடன் வணிகம் செய்யக்கூடாது, இலங்கை விமான சேவையை புறக்கணிப்போம், தமிழ் திரைத்துறை மட்டுமின்றி, இந்திய திரைப்பட கலைஞர்களும் இலங்கை செல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்த நாம் தமிழர் கட்சி முடிவெடுத்துள்ளது.

இதற்காக முதல்-அமைச்சரும் பொதுவானதொரு வேண்டுகோள் விடுக்க வேண்டும். கச்சத்தீவை மீட்பதற்கான முயற்சியாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தையும் வரவேற்கிறோம். அதோடு, இருநாடுகளுக்கிடையேயான கடற்பகுதியில் எவ்வித தடையுமின்றி தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும். இல்லையேல் இந்திய – இலங்கை கடல் எல்லை வரையறை ஒப்பந்தத்தையே ரத்து செய்வது தான் சரியானதாக இருக்கும் என்ற கோரிக்கையை தமிழக அரசுக்கு முன்வைக்கிறோம்.

தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அவர்களை கண்காணிப்பது அவசியம் என கருதினால் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி ஈழத் தமிழர்களுக்கான முகாம்களில் தங்கியிருக்குமாறு கட்டளையிடலாம். உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் தோல்வியை பொறுக்க முடியாமல் இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை சித்ரவதை செய்து படுகொலை செய்துள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, இந்திய நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

பொதுக்கூட்டம் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது. ஆனாலும் கூட்டத்தினர் கலையாமல் இறுதி வரை காத்திருந்து சீமான் பேச்சை கேட்டனர்.


















Monday, June 6, 2011

seeman1

ஒளியும் ஒலியும்: சீமான் -நடிகை விஜயலட்சிமி உறவு பற்றி -வீடியோ

ஒளியும் ஒலியும்: சீமான் -நடிகை விஜயலட்சிமி உறவு பற்றி -வீடியோ

யுத்தக் களத்தில் நின்றால் குண்டுகளையும் அரசியல் களத்தில் நின்றால் அவதூறுகளையும் எதிர்கொண்டு தான் ஆகவேண்டும்.

தம்பிகள் நாங்கள் இருக்கும் வரை எவனாலும் நாம் தமிழர் கட்சியை விழ்த்தமுடியாது

நெல்லை மாவட்ட நாம் தமிழர் கட்சி

இரா.புவனேந்திரன்

சண்டாளி விஜயலட்சுமி பற்றி செந்தமிழன் சீமானின் நேர் கானல்
http://sinnakuddy1.blogspot.com/2011/06/blog-post_06.html

அறிஞர் அண்ணாவுக்கு பானுமதி..! செந்தமிழன் சீமானுக்கு ஒரு சின்னத்திரை விஜயலட்சுமி..!

June 5, 2011

சீமான் என்ற மனிதனின் ஆசாபாசங்களும், அரசியலும் ஒன்றல்ல..

.
.
.
.
.
.
.
.
.
.
சீமான் விஜயலட்சுமி கூத்தாட்டத்தைச் சிந்திப்பதற்கு முன்னர் ஒரு தடவை அண்ணா காலத்து அரசியலை சிந்திக்க வேண்டும்…

சீமான் போலவே அன்று அண்ணாவும் பதிலளிக்க முடியாத பல கேள்விகளை இந்திய சமுதாயத்தின் மீதும், அதன் போலி முகங்கள் மீதும் தயக்கமின்றி முன் வைத்தார்…

அவருடைய வாதங்களை எதிர்கொள்ள பத்தாம்பசலிகளாக இருந்த அன்றைய காங்கிரஸ்காரரால் முடியவில்லை. அதனால் அவர்கள் அண்ணாவிற்கு எதிராக வகுத்த வியூகம் அக்காலத்து பிரபல நடிகை பானுமதி..!

பானுமதிக்கும் அண்ணாவுக்கும் தொடர்பு என்று காங்கிரஸ் கதை பரப்ப ஆரம்பித்தது..

அண்ணா சிந்தித்தார்… எப்படி இந்த சதிவலையை அறுத்தெறியலாம்…?

சீமான் போல போலீஸ் வழக்கை சந்திக்கவோ.. பானுமதியின் கற்பை வைத்திய பரிசோதனை செய்யவோ அண்ணா சந்தர்ப்பம் கொடுக்கவில்லை.. தனது பாணியிலேயே பதில் கொடுத்தார்..

- நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல..! பானுமதி படிதாண்டா பத்தினியும் அல்ல… ! –

கதை முடிந்தது.. பானுமதியை வைத்து ஆட முற்பட்ட காங்கிரசின் வியூகம் அறுந்து, காங்கிரஸ் ஆட்சியும் வீழ்ந்தது..

இது அண்ணா காலத்து வியூகம்..

இப்பொழுது செந்தமிழன் சீமான் காலம்..

அண்ணா போல சில பதிலளிக்க முடியாத கேள்விகளை அவரும் முன் வைக்கிறார்.. அவருடைய கேள்விகளுக்கான பதில் காங்கிரசிடம் இல்லை.. ஆகவே பானுமதி பாணியில் விஜயலட்சுமியை களமிறங்கியுள்ளார்கள்…

இந்த நேரம்…

- நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல..! விஜயலட்சுமி படிதாண்டா பத்தினியும் அல்ல..! – என்று சொல்ல சீமானிடம் நெஞ்சுரமில்லை..

சட்டப்படி வழக்கை சந்திப்பேன் என்று கூறி வருகிறார்..

போயும்போயும் தமிழ்நாடு சட்டத்தையா சந்திக்கப்போகிறார்… நெற்றிப் புருவங்கள் உயர்கின்றன.. இதற்குள் :

ஒரு பாக்கட் கஞ்சாவை சீமான் வீட்டில் வைத்து, அவரைக் கைது செய்யாமல் விஜயலட்சுமியின் கற்புப் புனிதத்தை பரிசோதனை செய்கிறதாம் தமிழ்நாடு போலீஸ்…

சிரிப்பதா.. அழுவதா..? ஆனால் :

நான் தற்கொலை செய்யப்போகிறேன் என்று ஒரு எஸ்.எம்.எஸ்சை சீமானுக்கு அனுப்பியுள்ளார் விஜயலட்சுமி..

ஒருத்தி சம்மந்தமில்லாத ஒருவனுக்கு தற்கொலை செய்யப்போவதாக எஸ்.எம்.எஸ் அனுப்பினால் ஒன்று அவளுக்கு மூளையில் எங்கோ பிழை இருக்க வேண்டும்.. இல்லை அவளுடைய எஸ்.எம்.எஸ்சிற்கு ஏதோ ஒரு நோக்கம் இருக்க வேண்டும்.

அதைவிட முக்கியம்…

விஜயலட்சுமி உண்மையாகவே சீமானை விசுவாசமாக காதலித்திருந்தால் அவருக்கு அனுப்பிய எஸ்.எம்.எஸ்கள், உரையாடல்களை ஏன் சேமித்து வைத்தாள்..? ஆகவே அவருடைய மனதில் கபடமான ஒரு நோக்கம் இருந்துள்ளது தெரிகிறது.

இப்படியெல்லாம் சிந்திக்க வேண்டும் என்ற விவஸ்த்தை தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு இருக்கிறதா..?

தமிழ்நாடு வெள்ளை வேட்டி அரசியல்வாதிகளை எடுத்துப்பார்த்தால், குறைந்தது இரண்டு மனைவிகள், பல சின்னவீடுகள் இல்லாத பேர்வழிகளை தேடிப்பிடிப்பது மாபெரும் கடினம்.

கற்பும், கண்ணகியும், சிலம்பும், செந்தமிழும், குறளோவியமும், புறநானூற்றுப் பூங்காவுமாக தமிழ் வேதம் ஓதும் மூதறிஞர் மு.கருணாநிதிக்கு எத்தனை மனைவிகள் என்று கேட்டால் இது குறித்து மேலதிகமாக பேச வேண்டிய தேவை வராது.

தி.மு.க தலைவர்கள் விபச்சாரியுடன் படுத்துவிட்டு, அவளுடைய பணத்தைக் கொடுக்காது அடித்து விரட்டிய கதை கண்ணதாசனின் வனவாசத்தில் இருக்கிறது. அவரும் இவர்களோடு சேர்ந்து படுத்துவிட்டுத்தான் எழுதினார். அவருக்கும் பல மனைவிகள்..

கோடம்பாக்கம் போனால் பல செவிவழி கதைகளைக் கேட்கலாம், பெண்கள் விடயத்தில் அங்கு நிலவும் அறியாமையை நினைத்து கவலைப்படலாம்.

அத்தனை பழமும் சொத்தைகள் தாண்டா ஆண்டவன் படைப்பினிலே இதில் அத்திப் பழத்தை குற்றம் சொல்ல யாருக்கும் வெட்கமில்லை என்கிறது ஒரு பாடல்..

ஒரு நடிகையைத் தவிர, சீமானைக் குற்றம் சொல்ல தகுதியுள்ள அரசியல் தலைவர் யார்..? சினிமா நடிகர் யார் ?

……………!!

சீமான் மீது போடப்பட்டுள்ளது மோசமான அரசியல் வியூகம்.. இதிலிருந்து தப்பவும், காங்கிரசை மேலும் முகவரி இல்லாமல் செய்யவும் ஒரே வழி சீமான் அண்ணா பாணியில் உண்மையை வெளிப்படையாகப் பேசுவதுதான்..

ஆளுக்கு இரண்டு பெண்டாட்டிகள், கூடவே ஆறேழு வைப்பாட்டிகள்.. ஆனால் இங்கிருக்கும் பெண்கள் எல்லாம் கண்ணகிகள்…

ரெண்டும் ரெண்டும் நாலு விடையாவருது ஏழு..!

கணக்கிட்டாள் நடிகை குஸ்பு.. அதுதான் அவள் கற்புக்கு துணிச்சலாக விளக்கம் தந்தாள்.. அந்த விளக்கம் அவளுடைய வட இந்திய அனுபவமல்ல.. கோடம்பாக்கத்தில் வைத்து அவள் கண்ட கற்பிற்கு அவள் கொடுத்த விளக்கம்.

பிரபாகரனின் தம்பி சீமான்..!

செந்தமிழன் சீமான்..!

பாயும்புலி சீமான்..!

அந்தப்புலி பாய வேண்டிய இடம் சிங்களவரின் கோட்டை..!

அப்படிப்பட்ட செந்தமிழ் புலி விஜயலட்சுமி வீட்டிற்குள் பாய்ந்துவிட்டதாகக் கூறுவது கொஞ்சம் ஓவர்..!

இருந்தாலும் :

ஆபும்.. புல்லும் அடித்து ஓவரா இருப்பவர்களின் வாயில் சிக்குப்படாமல் சீமான் தப்ப வேண்டுமானால் ஒரே வழி..

அண்ணாவைப் போலவும்.. ஐஸ்வர்யா ராய் போலவும் நடந்ததை வெளிப்படையாகப் போட்டுடைப்பதுதான் ஒரே வழி..!

சீமான் முற்றும் துறந்த முனிவனுமல்ல..! விஜயலட்சுமி படிதாண்டா பத்தினியுமல்ல..!

சீமான் ஒரு மனிதன் !

இதுவரை அவனுடைய கொள்கைகள் உன்னதமானவை..!

சீமான் எமக்கு வேலைக்காரனல்ல.. நாம் வாய்க்குவந்தவாறு கதைக்க: அவனும் மனிதன்தான்..

அவனுடைய மனித உணர்வையும் விஜயலட்சுமியையும் சம்மந்தப்படுத்துவது வேறு..

அவனுடைய அரசியலையும் விஜயலட்சுமியையும் சம்மந்தப்படுத்துவது வேறு..

இப்போது தமிழ்நாட்டில் இரண்டாவது சம்மந்தப்படுத்தல் நடப்பது தெளிவாகத் தெரிகிறது..

அலைகள் தென்னிந்தியப் பார்வை 05.06.0211

நன்றி; அலைகள்

Sunday, June 5, 2011

சீமானை வீழ்த்த நடக்கும் சதி..!

02-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

உண்மையாகவே பெரிதும் வருத்தப்படுகிறேன்..!

நிச்சயமாக இந்தச் செய்தி தவறானது என்பதில் நான் நூறு சதவிகிதம் நம்புகிறேன்..!

எனக்கு சீமானுடன் நேரடி பழக்கமில்லை. கை குலுக்கியிருப்பதோடு சரி..! இருந்தாலும் நான் இப்போதும் உறுதியுடன் சொல்கிறேன்.. விஜயலட்சுமி என்னும் இந்த நடிகை சொல்லியிருப்பது அபாண்டமானது..!

ஒரு பெண்ணி்ன் நடத்தையை வைத்து அவரை எடை போட முடியுமா..? அல்லது ஒரு சம்பவத்தினாலேயே அவரை பலி கடாவாக்க முடியுமா..?

முன்பு அப்படியிருந்திருக்கலாம். ஆனால் இப்போது திருந்தியிருக்கலாமே..?

ஏன் சீமானே மாறியிருக்கலாமே.. ஒரு நிமிடத்தில் அப்படி நடந்திருக்கலாமே..?

இப்படியெல்லாம் பகுத்தறிவோடு சிந்திக்காமல் இந்தச் செய்தியைப் படித்த காலை பொழுதிலேயே நான் உணர்ந்துவிட்டேன் இது நிச்சயம் பொய்யான புகாராகத்தான் இருக்கும் என்று..!

முதல் காரணம் செல்வி.விஜயலட்சுமியின் குணநலன்கள் அவர் சின்னத்திரைக்குள் கால் வைத்த தினத்தில் இருந்து என் காதுகளுக்கு எட்டியபடியே இருந்ததினால்தான்..! அவரைப் பற்றிய பல திடுக்கிடும் செய்திகள் பலவிதமான நண்பர்களிடமிருந்து ஒரே மாதிரியாக வந்து சேர்ந்து கொண்டேயிருந்தன.

அது ஒன்றே ஒன்றுதான்.. அவர் தகுதிக்குரியவர் என்று யாரை நினைக்கிறாரோ அவரிடமெல்லாம், “ஐ லவ் யூ..” சொல்வார்..! சிலரை இப்படியே கிறங்கடித்திருக்கிறார். பலர் அது உண்மையோ என்று நம்பி விஜயலட்சுமியுடன் சின்சியராகப் பழகத் துவங்க, சில நாட்களிலேயே வேறொருவருக்கு “ஐ லவ் யூ..” சொல்லிவிட்டு தாவி விடுவார் என்றார்கள்..!

சின்னத்திரை உலகம் மிகவும் சிறியது.. முதல் நாள் ஓரிடத்தில் கேமிரா உதவியாளராகவும், செட் உதவியாளராகவும், தயாரிப்பு உதவியாளராகவும் பணியாற்றுபவர் மறுநாள் வேறொரு படப்பிடிப்பில் கலந்து கொள்ள நேரிடும். மறுநாள் மீண்டும் முதல் நாள் சீரியலுக்கே திரும்பி வர வேண்டியிருக்கும்.. இப்படி இவர்கள் குண்டுச் சட்டிக்குள் ஓடுவதைப் போலவே ஓடிக் கொண்டிருப்பதால் ஒரு ஷூட்டிங்கில் நடப்பது, அடுத்த நாள் வேறொரு ஷூட்டிங்கில் லைவ் ரிலேவாக ஓடிக் கொண்டிருக்கும்.

அவைகளனைத்தையும் மீண்டும் இங்கே சொல்லி அவரைக் கேவலப்படுத்துவது எனது நோக்கமல்ல..! ஆனால் உண்மையே அவருடைய நடத்தையைப் பொறுத்துதான் இருக்கிறது என்பதால் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது..!

சீரியல்களில் நடிக்கும்போது, “நான் உங்களைக் காதலிக்கிறேன்..” என்று சில புரொடெக்ஷன் மேனேஜர்கள், கேமிராமேன்கள், இயக்குநர்களிடத்தில் விஜயலட்சுமி கூறியிருக்கிறார். இரண்டாவது யூனிட் இயக்குநரைக்கூட அவர் விட்டுவைத்ததில்லை.


“ஏன் லேட்டா வர்றீங்க..?” என்று கேட்டால்கூட 'கையைப் பிடித்து இழுத்தார்' என்ற ரேஞ்ச்சுக்கு ராடன் ஆபீஸுக்கு புகாரை அனுப்பி வைப்பார் விஜயலட்சுமி. இந்தத் தொல்லை தாங்காமலேயே அவரிடம் நேராகப் பேசாமல் இடைத்தரகராக இணை இயக்குநர் ஒருவரை வைத்துக் கொண்டுதான் அவரைச் சமாளித்தார்கள் இயக்குநர்கள்..!

அவரைத் தவிர்த்துவிட்டு சீரியலை தொடர முடியாத சூழல் வந்தபோதுதான், வேறு வழியில்லாமல் அனைத்து விவகாரங்களும் ராடன் டிவி நிர்வாகத்தின் முன் வைக்கப்பட்டு பஞ்சாயத்தாக்கப்பட்டது. அப்போதுதான் விஜயலட்சுமி சொன்ன “ஐ லவ் யூ” கதைகள் அனைத்தும் அம்பலமாகின..!

'தங்கவேட்டை' நிகழ்ச்சியின் இயக்குநர் ரமேஷ் மீது தன்னை காதலித்து ஏமாற்றியதாக விஜயலட்சுமி பொய்யாக, போலீஸில் புகார் கொடுக்கும் அளவுக்கு போன பின்புதான் அவரை அந்த இரண்டு தொடர்களிலிருந்தும் தூக்கினார்கள். பாவம் அந்த இயக்குநர் ரமேஷ்.. சில நாட்களாக தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். பெரும்பாடுபட்டு அந்த வழக்கை வாபஸ் பெற வைத்தார்கள்..!

2008-ம் ஆண்டு கன்னட நடிகர் லோகேஷின் மகன் ஸ்ரூஜன் லோகேஷுடன் விஜயலட்சுமி காதல் கொண்டு நிச்சயத்தார்த்தமும் நடந்தது. பின்பு இந்தக் காதலும் 6 மாதத்தில் முறிந்து போய்விட்டது. ஸ்ரூஜன் வேறொரு சின்னத்திரை நடிகையை திருமணம் செய்து கொண்டு போய்விட்டார். விஜயலட்சுமி மீண்டும் இப்போதுதான் 'பாஸ் என்ற பாஸ்கரன்' படத்தில் தமிழில் ரீ எண்ட்ரீயாகியிருந்தார்..!

இவருடைய இந்த நிலைமையோடு, சீமானின் நிலைமையையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்..!

வீடு முழுவதும் உதவி இயக்குநர்கள்.. தற்போதைய நிலையில் 10 இளைஞர்கள், அவருடைய வீட்டில் அவருடனேயே தங்கியிருக்கிறார்கள். ஒரு முறை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். மீண்டும் ஒரு முறை கைது செய்யப்பட்டு சாதா சிறைவாசம் அனுபவித்தார். அப்போதெல்லாம் இந்த விஜயலட்சுமி எங்கேயும் தென்பட்டதில்லை. 2 ஆண்டுகளாக காதலித்தோம் என்று கதை விடுவதற்கும் ஒரு அளவில்லையா..?

சீமானின் வீடு 24 மணி நேரமும் ஜாபர்சேட்டின் கண் பார்வையில்தான் இருந்தது. அவருடைய உதவி இயக்குநர்கள் அனைவருமே சீமானைப் போன்று தமிழ்த் தேசியம், ஈழம், பிரபாகரன் என்ற எண்ணத்திலேயே இருப்பவர்கள். இது போன்ற சின்னப்புள்ளத்தனத்திலெல்லாம் ஈடுபட சீமானுக்கெங்கே நேரமிருக்கப் போகிறது..?

அத்தோடு கட்சி வேறு ஆரம்பித்த கையோடு எப்பவும் நிருபர்களின் கண் பார்வையிலேயே இருந்தவர் இந்த விவகாரம் உண்மையாக இருந்திருந்தால் இந்நேரம் மாட்டியிருப்பார். சீமானை நன்கு அறிந்தவர்கள் இதனை எடுத்த எடுப்பிலேயே நிராகரிப்பார்கள்..! அவருக்கு காதல், கல்யாணம் இதிலெல்லாம் அக்கறையில்லை என்பது திரையுலகத்தினருக்கே தெரிந்த விஷயம்தான்.

இப்போதுதான் அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கட்சியினரின் வற்புறுத்தலினால் இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழ் பெண்ணை மணக்கலாம் என்ற அளவுக்கு இறங்கி வந்திருக்கிறார் என்று சிலிர்க்கிறார்கள் அவரது உதவி இயக்குநர்கள்..!

விஜயலட்சுமியுடனான அவரது தொடர்பு ஒன்றே ஒன்றுதான். அது விஜயலட்சுமியின் அக்கா உஷாவின் வரதட்சணை புகார் பற்றியது. விஜயலட்சுமியின் அக்கா கணவர் என்னைப் போன்ற சற்று யூத்தான தமிழ் இளைஞர்களுக்கு நன்று அறிமுகமானவர். 'திருட்டு புருஷன்' என்று ஆண்டு முழுவதும் காலை காட்சியாக ஓடி சாதனை படைத்த திரைப்படத்தின் கதாநாயகன் ராஜ்பாபு. இவர் நடிகை ஜெயப்ரதாவின் சொந்தத் தம்பி.

இவருடனான குடும்ப உறவு முறிந்த நிலையில், தனது அக்காவின் மகனை மீட்டுக் கொடுக்கும்படி 2008-ம் ஆண்டு விஜயலட்சுமி போலீஸில் புகார் கொடுத்திருந்தார். அந்தச் சமயத்தில்தான் சீமானை விஜயலட்சுமி சந்தித்ததாக சீமானின் வழக்கறிஞர் சொல்கிறார். சீமானை விஜயலட்சுமி தெரிந்து வைத்திருந்ததற்கு காரணம் சீமான் இயக்கிய 'வாழ்த்துகள்' திரைப்படத்தில் அவரும் நடித்திருந்ததுதான். இந்தச் சின்னத் தொடர்பை வைத்து 3 ஆண்டுகள் கழித்து சூப்பரான திரைக்கதை அமைத்து கதை கட்டிவிட்டிருக்கிறார்கள் சிலர்..!

நேற்று இந்தத் தகவல் நிருபர்களுக்கு எப்படி சென்றது என்பதும் ஒரு சுவாரசியம்..! காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஒரு முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர்தான் சினிமா பத்திரிகையாளர்களைத் தொடர்பு கொண்டு இந்த விஷயத்தைச் சொல்லியிருக்கிறார் என்று சினிமா வட்டாரத்தில் சொல்கிறார்கள். பத்திரிகையாளர்கள் கமிஷனர் அலுவலகத்துக்குப் போகும் முன்பேயே, விஜயலட்சுமி புகார் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்..!

ஆக முன்பே நன்கு திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நாடகமாகவே இதனை நான் கருதுகிறேன்..! இதற்கு விஜயலட்சுமி என்ற பெண்ணும் உடந்தை என்பதுதான் வேதனை..!

ஒருவரின் கொள்கைகளை, கருத்துக்களை நேருக்கு நேராகச் சந்திக்கத் தைரியமில்லாத கோழைகள், அவரை எப்பாடுபட்டாவது வீழ்த்திவிட வேண்டும் என்று நினைத்து கேரக்டர் அஸாஸினேஷன் செய்ய முயற்சிப்பது கேவலமானது..!

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சீமானின் புயல்வேகப் பிரச்சாரத்தில் காங்கிரஸின் டவுசர் கிழிந்தது, அக்கட்சியினருக்கு பெரும் கோபத்தைக் கிளறியிருக்கலாம் என்று நினைக்கிறேன்..!

தி.மு.க. நின்ற இடங்களிலெல்லாம் தோல்வி என்றால் அது ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு இருந்த கடுப்பு என்றே எடுத்துக் கொள்ளலாம். ஆனால் காங்கிரஸ் மீது..? அவர்கள் ஆளும் கட்சியினரின் தோழமைக் கட்சி என்ற ஒரு விஷயம் மட்டும்தான். ஆனால் இந்த ஒன்றுக்காகவேதான் காங்கிரஸுக்கு இவ்வளவு பெரிய தோல்வியா என்றால் இதை நான் நம்பவில்லை..!

ஊழலில் கூட்டணி அமைத்தது.. உயர்ந்து கொண்டேயிருந்த விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த திராணியற்ற நிலையில் ஆட்சி நடத்தியது.. கூடவே எண்ணற்ற தமிழ் இளைஞர்களை கொந்தளிக்க வைத்திருந்த முள்ளிவாய்க்கால் படுகொலையில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி செய்த துரோகமும், அந்தத் துரோகத்தை சீமான் தோலுரித்துக் காட்டியதாலும்தான் தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு இந்த அளவுக்கான படுதோல்வி கிடைத்தது என்று நான் உறுதியாக நம்புகிறேன்..!

இல்லையெனில் தி.மு.க. கூட்டணி தோற்றிருந்தாலும், காங்கிரஸுக்கு சுமாராக 15 தொகுதிகளாவது கிடைத்திருக்கும்.. அதிலும் மாதத்தில் 20 நாட்கள் தொகுதியிலேயே இருந்து வீடு, வீடாக சென்று தனது பெயரை நிலை நாட்டி, கோடியை செலவிட்டிருந்த ஹெச்.வசந்தகுமாரும், வேலூரில் சிறந்த எம்.எல்.ஏ. என்று 4 முறையும் பெயரெடுத்திருந்த சி.ஞானசேகரனும், ராமநாதபுரத்தில் மதப் பெரியவர்களின் முழு ஆசியைப் பெற்றிருந்த ஹசன் அலியும் தோற்றிருக்கவே மாட்டார்கள்..!

பாரதீய ஜனதா என்ற கட்சி இடையில் புகுந்து ஓட்டுக்களைக் களவாடிய காரணத்தினால்தான் தற்போதைய 6 சீட்டுக்களே காங்கிரஸுக்கு கிடைத்திருக்கிறது என்பதுதான் உண்மை. பா.ஜ.க.வும் வராமல் இருந்திருந்தால் முட்டைதான் கிடைத்திருக்கும்..!

ஆக.. காங்கிரஸின் இந்தத் தோல்வியில் சீமானுக்கு பெரும் பங்கு உண்டு என்பது அக்கட்சியினருக்கு கோபத்தைக் கிளப்பி, இப்படியொரு பொய்யான புகார் கொடுக்க பின்புலமாக இருந்திருக்கிறார்கள் என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது..!

இன்று காலையில் இருந்தே சினிமா துறையினர் பலரும் நிச்சயம் இது கட்டுக் கதை என்றே சொல்கின்றனர். இந்த அளவுக்கு சீமானின் நிஜ சுயரூபம் சினிமாவுலகில் தெரிந்திருக்கிறது..! இது ஒன்று போதும் அவருக்கு..!

எனக்கு சாபமிட மனசு வரவில்லை. ஆனாலும் மனம் பொறுக்காமல் சொல்கிறேன்.. விஜயலட்சுமியும், இந்தப் பழிக்குப் பின்னால் இருப்பவர்களும் வருங்காலத்தில் நிச்சயம் வெம்புவார்கள்..!

Saturday, May 21, 2011

முள்ளிவாய்க்கால் நினைவு மே 18 வேலூர் மாபெரும் பொதுக்கூட்டதின் புகைப்பட தொகுப்பு