Sunday, July 15, 2012


சிங்கள தேசத்தின் வன்முறை குறைந்தபாடில்லை

ஏதோ போர் முடிந்துவிட்டது தமிழர்கள் இனிமேல் அமைதியாக வாழ்வார்கள்என்று கொக்கரித்த சிங்கள அரசுஇன்று முன்னிலும் விட அடக்குமுறைஆட்சியை நடத்துகிறதுவிசாரணையின்றி தமிழ் மக்களை சிறைகளில்அடைத்து சித்திரவதை செய்வது தொடங்கிகைதிகளை அடித்துக் கொல்லும்நிலைவரை சிங்கள அரச பயங்கரவாதிகள் செய்கிறார்கள்நூறுமுள்ளிவாய்க்கால்களை சம்பந்தன் விரும்புகிறாரா என்று கேள்விகேட்குமளவுதமிழர்களின் பரிதாப நிலையே இன்று நிலவுகிறது.
சிங்கள அரச பயங்கரவாதத்தின் குகைக்குள் இருந்து கொண்டு மூச்சுவிடும் தமிழ்அரசியல்வாதிகளினால் வெளிப்படையான எந்தவொரு செயற்பாடுகளையும்முன்னெடுக்க முடியாதுமறைமுகமாக சில இராஜதந்திர ரீதியிலானசெயற்பாடுகளையே தமிழ் அரசியல்வாதிகள் (தமிழ்த் தேசிய முன்னணிஅரசியல்வாதிகளுக்கு மட்டுமே இது பொருந்தும்செய்து வருகின்றனர்சிங்களஅரசு செய்யும் எந்தவொரு வன்முறைகளையும் கண்டித்தால் அடுத்த கணமேஅவர்களுக்கும் மரண அச்சுறுத்தல்கள் விடப்படுகின்றனஇப்படியானதோல்வியுற்ற நாட்டிலேயேதமிழ் மக்கள் வாழ்கிறார்கள் (அன்றாடம் செத்துப்பிழைத்து வாழ்கிறார்கள்).
அன்று ஆயுதப் போருக்கு எண்ணெய் ஊத்தி பத்திவைக்கப்பட்டசிறைக்கைதிகளின் கொலைகள் (குட்டிமணிஜெகன் மற்றும் தங்கத்துரைஉட்பட 35 அரசியல் கைதிகள்மீண்டும் மகிந்தாவின்ஆட்சிக்காலத்தில்உருப்பெற்றுள்ளதுஐந்தாம் கட்ட ஈழப் போரை ஆரம்பிக்க தூண்டுகிறதுமகிந்தாவின் அரசு போலும்அப்பாவிகளை பணயக் கைதிகளாக வைத்துஅரசியல் நடத்தும் சிங்கள அரசியல்வாதிகள் நாட்டை அபிவிருத்திசெய்வதற்குப் பதில் நாட்டை குட்டிச்சுவராக்கவே முனைகிறார்கள்.சிறிலங்காவில் இனவாதத்திற்கு இடமில்லையென்று கூறிவிட்டு இனவாதத்தைவிதைக்கும் மகிந்தா போன்ற அரசியல்வாதிகளினால் சிங்கள மக்களுக்கும்அமைதியான வாழ்வு கிடைக்கப்போவதில்லை என்பதே உண்மை.
தமிழர்கள் மீது ஏவப்படும் தொடர்வன்முறை
போர் ஓய்ந்த காலத்திலிருந்து இன்றுவரை பல்வேறுபட்ட இன்னல்களை தமிழ்மக்கள் அனுபவிக்கிறார்கள்தமிழ் மக்களின்பிரதேசங்களை புனரமைப்பதாகக்கூறிவிட்டு அவர்களின் இடங்களை சிங்கள மயமாக்கும் திட்டமேநடைமுறையில் இருக்கிறதுமகிந்தாவின் புதல்வரே தமிழ் மக்களிடம்பணத்தை வாங்கிக்கொண்டு தமிழர்களை நாட்டைவிட்டு வெளியேற்றும்புரோகிதர் வேலையைச் செய்வதாக சமீபத்தில் செய்தி வெளியாகியது இங்குகுறிப்பிடத்தக்கதுவெளியேறும் தமிழ் மக்களிடம் பணத்தை மட்டும்வாங்காமல்அவர்களுடைய சொத்துக்களையும் பெற்ற பின்னர் சிங்களமக்களை குடியேற்றும் வேலையையும் பகிரங்கமாக செய்கிறார்.
இரவோடு இரவாக பல்லாயிரம் சிங்கள மக்கள் தமிழர்களின் பூர்வீகக்காணிகளில் குடியமர்த்தப்படுகிறார்கள்இதுபோன்ற வக்கிரப் போக்குடைய அரசபயங்கரவாதச் செயற்பாட்டை யாரும் கேட்க முடியாத சூழ்நிலையைஉண்டுபண்ணி வைத்துள்ளது சிங்கள அரசுவெளிநாடு இராஜதந்திரிகளுக்குவிருந்துகள் அளித்து தமிழ் மக்களுக்கே அனைத்து புனரமைப்புவேலைகளையும் குறிப்பாக தமிழர் பகுதிகளில் செய்வதாக பொய்யானதகவல்களை அளித்துவிட்டு சிங்களக்குடும்பங்களை தமிழர் நிலங்களில்குடியமர்த்தும் வேலைகளே நடைபெறுகிறது.
சில தினங்களுக்கு முன்னர் தென்மராட்சி எழுதுமட்டுவாள் பகுதியில் குடும்பத்தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இருசகோதர்களை அனுமதியின்றிஉள்பிரவேசித்த சிங்களப் படையினர் தாக்கிநான்கு பிள்ளைகளின் தந்தையைகொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பைஉண்டுபண்ணியது.இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி தமிழர் பகுதிகளில்நடைபெறுகிறதுகடத்தல்கொலைகொள்ளைகற்பழிப்பு போன்ற பல்வேறுசட்டவிரோதசெயற்பாடுகள் அன்றாடம் தமிழர்கள் சந்திக்கும்நிகழ்வுகளாகிவிட்டது.
தமிழ் அரசியல்கைதிகளை அன்றாடம் சித்திரவதை செய்யும் நிகழ்வுகள்அதிகரித்துள்ளனபயங்கரவாதத்தின் விளைவே தமிழ் இளைஞனின்மரணமென ஜக்கிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் மேல்மாகாணசபை உறுப்பினருமான கலாநிதி குமரகுருபரன் தெரிவித்தார்அவர்மேலும் தெரிவிக்கையில், “கைதிகள் கோரிக்கையை வைத்துத்தான் பணயம்வைத்தார்களே தவிரயாரையும் தாக்கியதாக தெரிவிக்கப்படவில்லைஎனவேகையாலாகாத கைதிகளை படுமோசமாக்தாக்கியதன் விளைவே கைதிகள்வைத்தியசாலைகளுக்கும்வேறு சிறைச்சாலைகளுக்கும்மாற்றப்பட்டதுவாகும்." இச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் எச்சரிக்கையாகவேஅமைந்துள்ளது.
உலகத் தமிழர்களை உசுப்பிவிட்டசிங்களம்
சமீபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்சம்பந்தனின் பேச்சுக்கு அச்சுறுத்தல் விட்டதுமட்டுமின்றி ஒட்டுமொத்ததமிழர்களையும் சீண்டிவிட்டது சிங்களம்நூறுமுள்ளிவாய்க்கால்களைவிரும்புகிறாரா சம்பந்தனென்று சிறிலங்காவின்அமைச்சர் சம்பிக்க ரணவக்க கேட்டது சம்பந்தனுக்கு எச்சரிக்கை விடுவதுமட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் எச்சரிக்கையாக அமைந்தது.தமிழகத் தமிழர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படத்தொடங்கியவுடன் சற்று கலங்கியது சிங்களம்இதனை அடக்க வேண்டுமாயின்இதுபோன்ற அச்சுறுத்தல்கள் பலனளிக்கும் என்று கருதியது சிங்களபயங்கரவாத அரசு போலும்.
சம்பந்தனின் கருத்துகள் எம்மைச் சீண்டுவதாக உள்ளதுஒருமுள்ளிவாய்க்கால் போதும் என்று கருதுகிறோம்இன்னும் 100முள்ளிவாய்க்கால்கள் அவருக்குத் தேவையாஅத்தகைய நிலையை ஏற்படுத்தஎவரும் முயற்சிக்கக் கூடாது” என்று கூறியிருந்தார் சம்பிக்க ரணவக்க.இக்கருத்தைக் கண்டித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திராவிடமுன்னேற்றக் கழக (தி.மு.தலைவர் கருணாநிதி கடிதம் ஒன்றை எழுதினார்(இவர் கடிதம் எழுதுவதில் வல்லவர்). பாட்டாளிமக்கள் கட்சி (பா..நிறுவனர்ராமதாஸ்இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கஒருங்கிணைப்பாளர்பழ.நெடுமாறன்விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்தொல்.திருமாவளவன் ஆகியோரும் சிறிலங்கா அமைச்சர் சம்பிக்கரணவக்கவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
சிங்கள அமைச்சரின் கருத்துக்கும் அதன் பின்னர் வெளிவந்த தமிழ்நாட்டுஅரசியல்கட்சிகளின் எதிர்ப்புக்கும்இந்தியாவின் முன்னணி ஆங்கில ஊடகங்கள்பலவும் முக்கியத்துவம் கொடுத்து எழுதின என்பது இங்குகுறிப்பிடத்தக்கது.முக்கியஇந்தி ஆங்கில நாளேடுகள் சிங்கள அரசுக்குஆதரவாகவேஇதுநாள் வரை எழுதி வந்துள்ளனஒரு சில தமிழ்பத்திரிகைகளைத் தவிர பல தமிழ் மொழிப் பத்திரிகைகளும் ஈழத் தமிழர்களுக்குஆதரவான கட்டுரைகளையும்செய்திகளையும் தற்போது வெளியிட்டுவருகின்றன.
மன்மோகன் சிங்குக்கு கருணாநிதி அனுப்பிய கடிதத்தில் எழுதியதாவது, “ஆத்திரத்துடன் கூடிய இந்த பேச்சு
..நன்றி .அனலை நிதிஸ் ச. குமாரன்