Friday, April 16, 2010

நாம் தமிழர் இயக்க செயல் வீரர்களே

நமது அரசியல் இயக்கத்தை துவக்குவதற்கு வெகு குறைந்த கால அவகாசமே இருப்பதால் அதற்கும் நாம் எவ்வாறு விளம்பர படுத்தலாம் என்று உங்கள் ஆலோசனைகளை இதில் பதிவு செய்து மேம்படுத்துங்கள்


ஒரு A4 தாளில் உங்கள் விருப்பப்பட்ட வாசகங்களை அச்செடுத்து உதாரணமாக மண்டியிடாத மானம் விழ்ந்துவிடாத வீரம் மே 18 நாம் தமிழர் அரசியல் இயக்க துவக்க விழா என்று அச்சிட்டு அதை லாமினேஷன் செய்து தேனீர் விடுதி உணவு விடுதி மற்றும் உங்கள் பகுதியில் உள்ள மக்கள் பார்வையில் உள்ள இடங்களில் வைக்கலாம்.குறைந்த செலவில் நாம் மாநாடு முடியும் வரை அது இருக்கும் கண்காணிப்பது எளிது


திரைப்பட அரங்குகளில் விளம்பர படுத்துவது.

கைபேசி மூலமாக குறுஞ்செய்தி (sms) அனுப்புவது

சுவரொட்டி விளம்பரங்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள்

பேருந்துகளில் ஓட்டும் தாள்கள் (stickers ) மூலம் விளம்பரபடுத்துவது

மின் கம்பங்களில் அச்செடுத்த வாசகங்கள் உள்ள தாள்களை தொங்கவிடுவது


மினஅஞ்சல் (email )வாயிலாக உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுதிகொண்டிருப்பது அவர்களையும்

அவர்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்த வேண்டுகோள் விடுப்பது


மாநாடு துவக்க விழா வாசகங்கள் பதிந்த ஆடைகள் அணிந்து கொண்டு நாம் இப்பொழுதிலிருந்தே

வீதியில் நகரம் முழுவதும் உலா வருவது

உங்கள் பகுதிகளில் உள்ள ஆடைகள் தேய்க்கும் அசையும் மற்றும் அசைய வண்டிகளின் மூலம்
(Dress ironning) விளம்பரபடுத்துவது



நமது அரசியல் இயக்கத்தை துவக்குவதற்கு வெகு குறைந்த கால அவகாசமே இருப்பதால் அதற்கும் நாம் எவ்வாறு விளம்பர படுத்தலாம் என்று உங்கள் ஆலோசனைகளை இதில் பதிவு செய்து மேம்படுத்துங்கள்

மே 18 நமது அரசியல் இயக்கத்தின் துவக்க விழா தமிழினத்தின் விடியலின் ஆரம்ப விழா வீறு நடை போடுவோம் விடியலை நோக்கி கடல் போல் மக்கள் அணிதிரட்டுவோம் மதுரையை நோக்கி இதுவே நமது லட்சியம் என்று உறுதி ஏற்போம்




"நாளைய தமிழினத்தின் எதிகாலம் "நாம் தமிழர்" நம் கையில்"

" நாம் தமிழராய் ஒன்றிணைந்து மீட்டெடுப்போம் தமிழீழத்தை"


என் அறிவுக்கு எட்டிய சிற்சில ஆலோசனைகள் இவை .

இரு தமிழனாக இரு. இரு உணர்வுள்ள தமிழனாக இரு

இரு தமிழினத்தை காக்க உயிர் கொடுக்கும் தமிழனாக இரு

எழு தமிழின துரோகிகளை அழிக்கும் நெருப்பாய் எழு.

எழு தமிழனை தமிழனாக மாற்றுவதற்கு எழு .




தமிழ் நாட்டிலிருந்து வேலசெரி தமில்தேவனுடன் நெல்லை இரா.புவனேந்திரன் (நாம் தமிழர்)

Tuesday, April 13, 2010